Home » , , , , » Indian Army Recruitment 2019 - இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

Indian Army Recruitment 2019 - இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

Written By Unknown on Thursday 12 September 2019 | September 12, 2019

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்த ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: இந்திய ராணுவம்
அமைப்பு: மத்திய அரசு
பணி: தொழில்நுட்ப பிரிவு
காலியிடங்கள்: ஆண்கள் – 175, பெண்கள் - 14
பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை
வயது வரம்பு: 20 முதல் 27

கல்வித்தகுதி:
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ஏரோநெட்டிக்கல், கம்ப்யூட்டர் என பல்வேறு துறைகளில் காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்

ராணுவத்தில் பணிபுரிந்த கணவனை இழந்த விதவைமார்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. விதவை பெண்களுக்கு தொழில்நுட்ப பிரிவில் 1 காலியிடமும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு 1 காலியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னை ஆபீசர் டிரேனிங் அகாடமியில் வைத்து இந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘Officer Entry AppIn/Login‘ என்ற பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஒரு முறை பார்த்தப் பின்பு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முறை, தொகுப்பூதியம், சம்பள படிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:Click Here

0 Comments:

Post a Comment

Popular Posts