MENU

Recent

Thursday, 12 September 2019

Unknown

Indian Army Recruitment 2019 - இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்த ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: இந்திய ராணுவம்
அமைப்பு: மத்திய அரசு
பணி: தொழில்நுட்ப பிரிவு
காலியிடங்கள்: ஆண்கள் – 175, பெண்கள் - 14
பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை
வயது வரம்பு: 20 முதல் 27

கல்வித்தகுதி:
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ஏரோநெட்டிக்கல், கம்ப்யூட்டர் என பல்வேறு துறைகளில் காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்

ராணுவத்தில் பணிபுரிந்த கணவனை இழந்த விதவைமார்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. விதவை பெண்களுக்கு தொழில்நுட்ப பிரிவில் 1 காலியிடமும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு 1 காலியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னை ஆபீசர் டிரேனிங் அகாடமியில் வைத்து இந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘Officer Entry AppIn/Login‘ என்ற பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஒரு முறை பார்த்தப் பின்பு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முறை, தொகுப்பூதியம், சம்பள படிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:Click Here

Read More

Thursday, 5 September 2019

Unknown

RRB Recruitment 2019 - Southern Railway Invites Application For Engagement Of Ex-Servicemen

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! மொத்தம் 2,393 காலியிடங்கள்!

தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,393 பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் ட்ரக்மேன், ஹெல்பர், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

நிறுவனம்: தெற்கு ரயில்வே 
அமைப்பு: மத்திய அரசு 
பணி: தொழில்நுட்ப ரீதியிலான பாதுகாப்பு பிரிவு 
காலியிடங்கள்: 2,393 
பணியிடம்: சென்னை 
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.rrcmas.in 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி 
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 13 ஆகஸ்ட் 2019 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 செப்டம்பர் 2019 

தகுதிகள்: 
15 வருடங்கள் ராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆர்மி கிளாஸ் 1 சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
ஆகஸ்ட் 13ம் தேதியின்படி, 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் இராணுவ சேவையைப் பொறுத்து விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது அவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின்பு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 

சம்பளம்: 22,968 ரூபாய் முதல் 27,072 ரூபாய் வரையில். 

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்http://www.rrcmas.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து செப்டம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்
Detail notification : Click Here
Apply Now : Click Here
Read More
Unknown

New Job - Chennai Metro Rail Limited Recruitment 2019 For Assistant Post

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடேட் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
www.gkplusgk.com
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிறுவனத்தில்,அக்கவுண்ட்ஸ் மற்றும் DMS ஆகிய துறைகளில் உதவியாளர் பதவிகள் நிரப்பபடுகிறது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் இரண்டு பணியிடங்களும், DMS பிரிவில் ஒரு பணியிடமும் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 


விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களோடு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், பணி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பிரிவில் குறைந்தது இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் MS Office உள்ளிட்ட அலுவல் பணியில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 



தேர்வு செய்யப்படும் முறை: 
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் மருத்துவ சோதனையும், பின்பு திறனறிவுத்தேர்வும் நடத்தப்படும். மேலும், நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மெட்ரோவில் பணியமர்த்தப்படுவார்கள். 



இந்த பணியில் சேருவதற்கு மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்https://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து 24-08-2019 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: 
 Detail Notification : Click Here
Read More