Home » , , , » RRB NTPC தேர்வு .. ஹால்டிக்கெட், தேர்வு தேதி வெளியடுவதில் தாமதம் ஏன்?

RRB NTPC தேர்வு .. ஹால்டிக்கெட், தேர்வு தேதி வெளியடுவதில் தாமதம் ஏன்?

Written By Unknown on Tuesday 1 October 2019 | October 01, 2019

RRB NTPC தேர்வு .. ஹால்டிக்கெட், தேர்வு தேதி வெளியடுவதில் தாமதம் ஏன்?


இந்தாண்டு ரயில்வேயில் ஒட்டு மொத்தமாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே தேர்வு வாரியம் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டது. மொத்தம் 35 ஆயிரத்து 208 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கு 1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பத்தனர்.
இவ்வாறு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் RRB NTPC தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது செப்டம்பர் மாதமும் நிறைவடையும் தருவாயில், RRB NTPC தேர்வு குறித்து ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை. இதனால், விண்ணப்பித்த 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்த வாரத்திற்குள்ளாக ஆர்.ஆர்.பி தேர்வு எப்போது நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த வாரமும் தவறிப்போனால், இனி அடுத்த மாதம் தான் அறிவிப்பு வெளியாகும். ஆர்.ஆர்.பி.,யின் இந்த அலட்சியே நடவடிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது ஆர்.பி.பி தேர்வு எப்போது நடைபெறும், ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பான விபரங்கள் ஒரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் அடுத்த சில தினங்களில், ஆர்.ஆர்.பி.,யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RRB NTPC என்பது தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்கள் ஆகும். அதாவது, டிக்கெட் பரிசோதகர்,இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணக்கர், பாராமெடிக்கல் பணியாளர், ரயில்வே பணியாளர் ஆகிய பதவிகள் ஆகும். ஒட்டு மொத்தமாக 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து ஆராய்வதற்கு கால தாமதம் ஆகிறது. இதன் காரணமாகத்தான் தேர்வு தேதி வெளியிடுவதிலும், ஹால்டிக்கெட் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளது

0 Comments:

Post a Comment

Popular Posts